Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மழை நேரத்துல இந்த சாதத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. நெஞ்சு சளியே பிடிக்காது...
Vetrilai Saadham Recipe In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. காலநிலை மாற்றத்தால் இப்படியான பிரச்சனைகளை சந்திப்பது பொதுவாக இருக்கலாம். இந்த சூழ்நிலையை தவிர்க்க நினைத்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும். அதற்கு நாம் உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன.
அதுவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்களை நிறைந்த பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடும் போது, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை தாக்கும் திறன் மேம்படும். அப்படி மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க உதவும் ஒரு அற்புதமான ரெசிபி தான் வெற்றிலை சாதம்.

இந்த வெற்றிலை சாதத்தை மழை காலத்தில் அடிக்கடி, அதுவும் வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால், நெஞ்சு சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். இந்த வெற்றிலை சாதம் மிகச்சிறந்த ஒரு லன்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. இந்த சாதமானது எப்படி இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சாதம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ப்ரைடு ரைஸ் போன்ற சுவையில் தான் இருக்கும்.
உங்களுக்கு வெற்றிலை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெற்றிலை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி/வேர்க்கடலை - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெற்றிலை - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* முருங்கைப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* சாதம் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
உருகியதும், அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும்
முந்திரியை சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து,
மிதமான தீயில் வைத்து, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் உப்பு மற்றும் முருங்கைப் பொடியை சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை 2 கப் சேர்த்து நன்கு
கிளறி விட்டு இறக்கினால், சுவையான வெற்றிலை சாதம் தயார்.



Click it and Unblock the Notifications