Latest Updates
-
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம்
1 கப் வேர்க்கடலை இருந்தா இந்த காரப்பொடியை அரைச்சு வைச்சுக்கோங்க... சாதத்துக்கும், தோசைக்கும் செமையா இருக்கும்!
Verkadalai Kara Podi Recipe in Tamil: ஆந்திரா ஹோட்டல்களுக்கு பெரும்பாலான மக்கள் செல்வது பருப்பு பொடி போட்டு சாப்பிடத்தான். சூடான சாதத்தில் அந்த பருப்புப் பொடியை போட்டு நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதே அலாதி இன்பம்தான். ஆந்திரா பருப்புப் பொடி போலவே வேர்க்கடலை பொடியும் சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் வேர்க்கடலையில் புரோட்டின் அதிகமாக இருப்பதால் இது சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த சத்தான மற்றும் சுவையான வேர்க்கடலை காரப்பொடி மிகவும் பிடிக்குமென்றால், அதை வாங்க கடைக்குதான் போக வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டிலேயே அந்த சுவையான வேர்க்கடலைப் பொடியை செய்து விடலாம். இதை செய்வதற்கான அனைத்து பொருட்களும் நம் வீட்டிலேயே உள்ளது. அதை சரியான அளவில் சேர்த்து அரைத்தால் போதும்.

உங்களுக்கு சூப்பரான வேர்க்கடலைப் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலைக் காரப் பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் வேர்க்கடலை
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 10 சிவப்பு மிளகாய்
- ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- சிறிய துண்டு புளி
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 10 பல் பூண்டு
- தேவையான அளவு உப்பு
- 2 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில், 1 கப் வேர்க்கடலையை குறைந்த தீயில் மொறுமொறுப்பாக மாறும் வரை வறுக்கவும்.
- தோல் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் சீராக வறுக்கவும். முழுமையாக ஆறியவுடன் வேர்க்கடலையிலிருந்து தோலைப் பிரிக்கவும். இதை தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் 10 காய்ந்த சிவப்பு மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் 1 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- மேலும் ஒரு சிறிய துண்டு புளி, 2 ஸ்பூன் வர தேங்காய் சேர்த்து, மிதமான தீயில் வறுக்கவும்.
- இது முழுவதுமாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாகப் பொடியாக அரைக்கவும்.
- பின் மீண்டும் வறுத்த வேர்க்கடலை, 10 பல் பூண்டு, 1 ஸ்பூன் உப்பு மற்றும் 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை காரப்பொடி ரெடி,
- இதை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
- இது இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும், முயற்சி செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications