Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வேர்க்கடலை சட்னியை ஒருவாட்டி இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...
Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு தினமும் சட்னியை முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வசதிக்காக இன்று காலை டிபனுக்கு வேர்க்கடலை கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வெறும் 5 பொருட்களைக் கொண்டு வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள். இப்படி செய்யும் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, உப்புமாவுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி ஒருமுறை வேர்க்கடலை சட்னியை செய்தால், பின் இந்த பக்குவத்தில் தான் எப்போதும் வேர்க்கடலை சட்னியை செய்வீர்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 2-3
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 3 பல்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 1/2 கப்
துருவிய தேங்காய், சிறிது புளி, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications