Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி
சற்று வித்தியாசமான சப்பாத்தி சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சப்பாத்தி சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யுங்கள். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை சப்பாத்தியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* வெந்தயக் கீரை - 1 கட்டு
* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெந்தயக் கீரையின் இலைகளை தனியாக எடுத்து, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக் கீரை, சாம்பார் பவுடர், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் சிறிது எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.
குறிப்பு:
உங்களுக்கு வெந்தயக்கீரையின் கசப்புச் சுவை வேண்டாம் என்றால், வெந்தயக் கீரையை 1/2 டீஸ்பூன் எண்ணெயில் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின் கோதுமை மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.



Click it and Unblock the Notifications
