Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2 பெரிய வெங்காயமும், 1/2 கப் தயிரும் இருந்தா இந்த வெங்காய தொக்கை செய்யுங்க... செம சைடிஷா இருக்கும்...!
Vengaya Thokku Recipe in Tamil: மதியம் எப்பவும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? ஏதாவது புதிதாக செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? முக்கியமாக வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் அப்படிப்பட்ட சமயத்தில் வீட்டில் பெரிய வெங்காயமும், தக்காளியும் மட்டும் இருந்தால் போதும், சுவையான மற்றும் எளிதான வெங்காய பச்சடியை செய்யலாம்.
இந்த வெங்காய பச்சடியின் ஸ்பெஷலே இதை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம், அதேசமயம் தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது டக்கென்று சமையலை முடிக்க நினைப்பவர்களுக்கு சரியான ரெசிபியாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இந்த மாதிரியான ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்தில் கைகொடுக்கும்.

உங்களுக்கு வெங்காய பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 2 பெரிய வெங்காயம்
- அரை கப் தயிர்
- 20 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு
- 1 சிறு துண்டு இஞ்சி
- 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
- 1டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய்சூடானதும் அதில் நாம் உரித்த சின்ன வெங்காயங்களை போட்டு வெங்காயம் சற்று பொன்னிறமாகும் வரை வதக்கி ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், சோம்பு, பெருங்காயம், மற்றும் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் இருக்கும் தண்ணீர் சற்று வற்றும் வரை அதை வதக்கவும்.
- தண்ணீர் வற்றிய பின் அதில் தயிரை சேர்த்து அதை கிளறி விடவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- இறுதியாக அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி
போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 20 நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான வெங்காய சப்ஜி ரெடி. இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அதேசமயம் தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











