Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
3 வெங்காயமும், 1 கைப்பிடி கொத்தமல்லியும் இருந்தா.. மதியம் இப்படி செய்யுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
Vengaya Pachadi Recipe In Tamil: மதியம் எப்பவும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு சமைக்கவே பிடிக்கவில்லையா? முக்கியமாக வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் அப்படிப்பட்ட சமயத்தில் வீட்டில் 3 வெங்காயமும், 1 கைப்பிடி கொத்தமல்லியும் இருந்தால், அவற்றை வைத்து பச்சடி செய்யுங்கள்.
இந்த வெங்காய பச்சடியை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், ருசி பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது டக்கென்று சமையலை முடிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி. வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இந்த மாதிரியான ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்தில் கைகொடுக்கும். முக்கியமாக இந்த பச்சடியை இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு வெங்காய பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 8
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பெரிதாக நறுக்கியது)
* பூண்டு - 12 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து, வெங்காயம் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, புளியை சேர்த்து, 2 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மிளகாய் தூளின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில்
வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் அரைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு சேர்த்து நிறம் லேசாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் தோலோடு தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து, பெருங்காய தூள் தூவி, பூண்டின் நிறம் மாற
வதக்கி, அரைத்த பச்சடியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வெங்காய
பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications