Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இன்றைய ஸ்பெஷல் ரெசிபி - வெந்தய குழம்பு
இன்று உங்கள் வீட்டில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மிகவும் ஈஸியாக அதே சமயம் சுவையாக இருக்கும் ஒரு ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வெந்தய குழம்பு செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மிகவும் ஈஸியாக அதே சமயம் சுவையாக இருக்கும் ஒரு ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வெந்தய குழம்பு செய்யுங்கள். இந்த வெந்தய குழம்பில் வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை போட்டு செய்தால், குழம்பு இன்னும் ருசியாக இருக்கும். வெந்தய குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெந்தய குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, வெந்தயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாறு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதை குழம்பில் ஊற்றி கிளறினால், சுவையான வெந்தய குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
