Just In
- 9 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 41 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 3 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
Don't Miss
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ருசியான... வெந்தய கார குழம்பு
உங்கள் வீட்டில் சமைப்பதற்கு காய்கறிகள் இல்லாவிட்டால் கலவைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் வெந்தயம் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கார குழம்பு செய்யலாம்.
ஊரடங்கு காலம் என்பதால் நம்மால் அனைத்தையும் ஒரே வேளையில் ஞாபகம் வைத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. சில சமயங்களில் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளைக் கூட வாங்க மறந்துவிடுவோம். அப்படி உங்கள் வீட்டில் சமைப்பதற்கு காய்கறிகள் இல்லாவிட்டால் கலவைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் வெந்தயம் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கார குழம்பு செய்யலாம். இந்த வெந்தய கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு வெந்தய கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 8-10 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி பேஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து ஒருமுறை வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அடிப்பிடிப்பது போல் இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.
* இப்போது அதில் புளி பேஸ்ட் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்து, வேண்டுமானால் அரை கப் நீரை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தய கார குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking