Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க வீட்டுல வெண்டைக்காய் சாப்பிடமாட்டாங்களா? இப்படி ப்ரை செய்யுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Vendakkai Varuval/Fry: காய்கறிகளில் வெண்டைக்காய் வளுவளுப்பாக இருப்பதால், நிறைய பேர் இந்த காய்கறியை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்டைக்காய் ஏராளமான சத்துக்களைக் கொண்டது. இதை அடிக்கடி சாப்பிட்டால் பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை சாப்பிடுவது மிகவும் நல்லது.
வெண்டைக்காயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் வெண்டைக்காயை வறுவல்/ப்ரை செய்தால், பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்டைக்காய் ப்ரையை சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, வெறுமனே கூட சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு வெண்டைக்காய் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் ப்ரையை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 500 கிராம்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை சிறு நீளத் துண்டுகளாக வெட்டி, அதை ஒரு
பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்,
கரம் மசாலா, மாங்காய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது
நீரைத் தெளித்து, மசாலா வெண்டைக்காயில் ஒட்டும் வரை நன்கு பிரட்டி விட
வேண்டும்.
* பின்பு அதை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, நன்கு பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications