Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
லன்ச் பாக்ஸிற்கு வெண்டைக்காய் வெச்சு இப்படியொரு சாதம் செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Vendakkai Rice Recipe In Tamil: தினமும் காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று ஒரு முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? பெரும்பாலும் உங்கள் பிள்ளைகளுக்கு வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா?
இதுவரை எத்தனையோ காய்கறிகளைக் கொண்டு நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்திருப்பீர்கள். ஆனால் வெண்டைக்காய் கொண்டு செய்துள்ளீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை இந்த சாதத்தை செய்யுங்கள். இந்த வெண்டைக்காய் சாதம் மதிய வேளையில் சாப்பிட அருமையாக இருக்கும்.

அதுவும் இந்த சாதத்திற்கு பிரத்யேகமாக தயாரிக்கும் பொடி தான், இந்த சாதத்தின் சுவையை மேம்படுத்துகிறது. உங்கள் பிள்ளைகள் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இப்படியொரு சாதத்தை செய்து கொடுங்கள், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். படிக்கும் குழந்தைகளின் உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
உங்களுக்கு வெண்டைக்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 3
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெண்டைக்காய் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாதம்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு,
கடலைப்பருப்பு, வேர்க்கடலை, சீரகம், மிளகு சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கி
வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, வெண்டைக்காய் நன்கு
சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ளதை
சேர்த்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு மசாலா
சாதத்துடன் ஒன்றுசேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான
வெண்டைக்காய் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications