Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
1/4 கிலோ வெண்டைக்காயும், 1/2 கப் பாலும் இருந்தா இந்த கிரேவியை செய்யுங்க..தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Vendakkai Poricha Kulambu Recipe in Tamil: வெண்டைக்காய் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி சமைக்கும் ஒரு காய்கறியாகும். அதற்கு காரணம் அதன் சுவையாக இருந்தாலும் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று பொதுவான நம்பிக்கையும் ஒரு காரணமாகும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையில் வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும்.
பொதுவாக வெண்டைக்காயை சாம்பார் அல்லது புளிக்குழம்பு செய்துதான் சாப்பிடுவோம், சில சமயங்களில் வெண்டைக்காயை வைத்து பொரியல் கூட செய்வோம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் வெண்டைக்காயை வைத்து சூப்பரான பொரிச்ச குழம்பு செய்யலாம். வெண்டைக்காயை இந்த மாதிரி குழம்பு செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சுவையான வெண்டைக்காய் பொரிச்சக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரிச்ச குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 3
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- பால் - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- வெண்டைக்காயை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
- ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொரித்து எடுக்கவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு தாளிக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றவும், அத்துடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதிக்கும் போது அதில் மிளகாய்த்தூளை சேர்த்து கொதிக்க விடவும்.
- மிளகாய்த்தூள் வாசனை போனதும் பாலைச் சேர்க்கவும்.
- குழம்பு நன்கு கெட்டியாக வந்ததும் பொரித்த வெண்டைக்காயை போட்டு கிள்றி 2 நிமிடம் விட்டு இறக்கினால் வெண்டைக்காய் பொரிச்ச குழம்பு ரெடி.
- இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications