Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
கிராமத்து ஸ்டைல் வெண்டைக்காய் பச்சடி ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!
Vendakkai Pachadi Recipe in Tamil: மதியம் எப்பவும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு சமைக்கவே பிடிக்கவில்லையா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் இருக்கா? அப்படியானால் அதை வைத்து ஒரு சுவையான மற்றும் எளிதான பச்சடியை செய்து பாருங்கள்.
இந்த வெண்டைக்காய் பச்சடியை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது டக்கென்று சமையலை முடிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி. வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இந்த மாதிரியான ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்தில் கைகொடுக்கும். குறிப்பாக இந்த வெண்டைக்காய் பச்சடி சாதத்துடன் சாப்பிட மட்டுமின்றி இட்லி, தோசையுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு அட்டகாசமான வெண்டைக்காய் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 வெண்டைக்காய்
- 3 டேபிள் ஸ்பூன் புளி
- 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் பொடி
- 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
- 1 டேபிள்ஸ்பூன் கடுகு
- 1 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1/2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். நன்றாக மசித்து, ஒரு தனி கிண்ணத்தில் புளிச்சாறை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- வெண்டைக்காயை நீரில் கழுவி நன்றாக துடைத்து உலர வைக்கவும். பின்னர் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.
- வெண்டைக்காய் வெந்ததும் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
- வெண்டைக்காய் வெந்து கொதித்ததும் அரிசி மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
- வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- அவ்வளவுதான் அடுப்பிலிருந்து இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications