Latest Updates
-
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வெண்டைக்காய் வாங்குனா இப்படி கூட்டு செஞ்சு பாருங்க... வெண்டைக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
Vendakkai Kootu Recipe in Tamil: அனைத்து வீடுகளிலும் வாரம் ஒருமுறையாவது சமைக்கும் ஒரு காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். வெண்டைக்காயை சாம்பார், புளிக்குழம்பு மற்றும் பொரியல் என பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். விருந்துகளில் பொரியலுக்கு அருகில் எப்போதும் இருக்கும் மற்றொரு சைடிஷ் என்றால் அது கூட்டுதான்.
கூட்டு என்றால் பொதுவாக சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றில் செய்வார்கள், ஆனால் வெண்டைக்காயை வைத்தும் கூட்டு செய்யலாம். ஆனால் வெகுசிலரே இதை செய்வார்கள். வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் இந்த கூட்டு சாதத்துடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். அதேசமயம் இதை செய்வதும் மிகவும் எளிதானதாகும். இந்த பதிவில் சுவையான வெண்டைக்காய் கூட்டு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வெண்டைக்காய் - 20
- பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1
- சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
அரைக்க:
- துருவிய தேங்காய் - கால் கப்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு தக்காளியையும், வெண்டைக்காயையும் நறுக்கி ஓரமாக வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், பாசிப்பருப்பு, சாம்பார் பொடி, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். நீராவி வெளியான பிறகு குக்கரை திறக்கவும். இந்த பருப்பை நன்றாக மசித்து ஓரமாக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு சுருளும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வேக வைக்கவும். வெண்டைக்காய் நன்கு வேகும் படி மூடி வைத்து சமைக்கவும்.
- வெண்டைக்காய் நன்கு வெந்ததும் அதில் வேகவைத்த பாசிப்பருப்பு, தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- இந்த கலவையை நன்கு கொதிக்க வைக்கவும், நன்கு கொதித்ததும் அதில் கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும்.
- கார சுவையை விரும்புபவர்கள் கொஞ்சம் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- சூப்பரான வெண்டைக்காய் கூட்டு ரெடி. இதை சைடிஷாகவோ அல்லது சாதத்தில் போட்டு பிசைந்தோ சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
