Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
¼ கிலோ வெள்ளரிக்காய் இருந்தா இந்த வித்தியாசமான செட்டிநாடு கிரேவியை செய்யுங்க..சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்!
Vellarikai Kara Kulambu Recipe In Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினையாகும். தினமும் ஒரே மாதிரியான சாம்பார், புளிக்குழம்பு செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் போரடிக்க தொடங்கியிருக்கும். அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் வெள்ளரிக்காய் கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
பொதுவாக வெள்ளரிக்காயை மிளகாய் பொடி தொட்டு வெறும் வாயில் சாப்பிடுவோம், ஆனால் அதை வைத்து சூப்பரான குழம்பே செய்யலாம். காரக்குழம்பு என்றால் பொதுவாக வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில்தான் செய்வார்கள். ஆனால் பலரும் சாப்பிடாத வெள்ளரிக்காயை வைத்தும் சூப்பரான செட்டிநாடு கார குழம்பு செய்யலாம். இந்த வெள்ளரிக்காய் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும், மேலும் இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு வெள்ளரிக்காய் கார குழம்ப எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெள்ளரிக்காய் - ¼ கிலோ (சிறு துண்டுகள்)
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - ½ டீ ஸ்பூன்
- தக்காளி - 2
- வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ¼ டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - ¼ டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
- வெள்ளரிக்காயை மண்ணில்லாமல் கழுவி தோல் பகுதியை நீக்கிக்
கொள்ளவும்.
- பின் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதன்மேல் கருமையாக பூஞ்சை இருந்தால் அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி
விட்டு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளி மற்றும் பச்சை மிளகாயை கழுவி அதையும் பொடி பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்
- குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- அதனுடன் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து
தாளித்துக் கொள்ளவும்.
- அதில் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம், மஞ்சத்தூள் மற்றும்
சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு
வதக்கிக் கொள்ளவும்.
- பின் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி
விட்டு மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு
விசில் வரும் வரை வேக விடவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் தண்ணீர் இருந்தால் அது
சற்று குறையும் வரை வேக விடவும்.
- பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான
வெள்ளரிக்காய் குழம்பு தயார்.
- இதை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications