Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல்
Vegetable Spring Rolls Recipe: இன்று மாலை உங்கள் பிள்ளைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் ஸ்பிரிங் ரோலை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல் செய்யுங்கள்.
இந்த வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல் செய்வது மிகவும் சுலபம் மேலும் இதில் காய்கறிகள் அடங்கியிருப்பதால், சத்தானதும் கூட. காய்கறிகளை விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு, ஸ்பிரிங் ரோல் செய்து கொடுப்பதன் மூலம், காய்கறிகளை சாப்பிட வைக்கலாம்.

உங்களுக்கு வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்பிரிங் ரோல் சீட் - 10
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 3
பேஸ்ட் செய்வதற்கு...
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட் சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி,
மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சோயா சாஸ் மற்றும் சோள மாவை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு
தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் மைதா மற்றும் நீர் சேர்த்து கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு ஸ்பிரிங் ரோல் சீட்டை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன்
வதக்கிய காய்கறியை நடுவே வைத்து, ரோல் சீட்டின் முனைகளில் மைதா நீரை
தடவ வேண்டும்.
* பின் அதை ரோல் போன்று இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப்
போல் அனைத்து ஸ்பிரிங் ரோல் சீட்டையும் செய்ய வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள ரோல்களைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெஜிடேபிள் ஸ்பிரிங் ரோல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications