Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெஜிடேபிள் சூப் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Vegetable Soup Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் பலரும் பலவிதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றுகளின் அபாயத்தில் இருந்து விடுபட, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்படியான சூப்புகளை தயாரித்து குடித்து வருவது நல்லது.
சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வெஜிடேபிள் சூப். இந்த வெஜிடேபிள் சூப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இதுவரை சூப் குடிக்க தயங்குபவர்கள் கூட, இப்படி சூப் செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெஜிடேபிள் சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 லிட்டர்
* கார்ன் சிப்ஸ் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுகிய முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், ஸ்வீட்
கார்ன் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2
நிமிடம் வதக்கி, 1/2 லிட்டர் நீரை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு பாத்திரத்தில் நீரை
வடிகட்டிவிட்டு, காய்கறிகளை மத்து கொண்டு மசித்துவிட வேண்டும்.
* பின் மசித்த காய்கறிகளுடன் வடிகட்டி கட்டி வைத்துள்ள நீரை ஊற்றி,
மீண்டும் அதை அடுப்பில் வைத்து, அத்துடன் மிளகுத் தூள், சீரகத் தூள்
சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவை நீரில் கலந்து ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி,
மீதமுள்ள 1/2 லிட்டர் நீரை ஊற்றி, சூப் நன்கு கெட்டியாகும் வரை நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* சூப் நன்கு கொதித்து கெட்டியானதும், உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, அதை இறக்கி, அதில் கார்ன் சிப்ஸை
தூவினால், சுவையான வெஜிடேபிள் சூப் தயார்.



Click it and Unblock the Notifications