Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
குழந்தைகளுக்கு பிடிக்கும்.. வெஜிடேபிள் அவல் கட்லெட்
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? தினமும் போண்டா, பஜ்ஜி, வடை செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் கட்லெட் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? தினமும் போண்டா, பஜ்ஜி, வடை செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் கட்லெட் செய்து கொடுங்கள். கட்லெட் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்று. அதுவும் கட்லெட்டில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகளை சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனால் குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு வெஜிடேபிள் அவல் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் அவல் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
* சீஸ் - 1/4 கப் (துருவியது)
* கேரட் - 1/4 கப் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* மைதா - 2 டீஸ்பூன்
* பிரட் தூள் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அவலை நீரில் கழுவி, நீரை வடித்துவிட்டு, தனியாக 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் உருளைக்கிழங்குகளை வேக வைத்து, அதை துருவிக் கொள்ளலாம் அல்லது மசித்துக் கொள்ளலாம்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, ஊற வைத்த அவல், துருவிய கேரட், துருவிய பன்னீர், சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மிளகாய் தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சுவைக்கேற்ப எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கட்லெட் போட்டு தட்டையாக தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் மைதாவை எடுத்து, நீர் சேர்த்து மெல்லிய பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒவ்வெரு கட்லெட் துண்டுகளையும் எடுத்து, முதலில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் அவல் கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
