Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வெஜ் பாயா ரெசிபி... இட்லி மற்றும் இடியாப்பத்துக்கு மட்டன் பாயாவே தோத்துப்போகும் காய்கறி பாயா செஞ்சு அசத்துங்க!
Vegetable Paya Recipe in Tamil: பெரும்பாலும் ஹோட்டல்களில் இடியாப்பம் என்றால் பாயா தான் சைடு டிஷ். அதுவே சைவ உணவு விரும்பிகளுக்கு தேங்காய் பாலும், சர்க்கரையும் தான். ஏன் அசைவத்தில் மட்டும் தான் பாயா செய்ய வேண்டுமா என்ன? சைவத்தில் செய்தால் குற்றமாகி விடுமா? காய்கறிகளை வைத்து எப்படி வீட்டில் சுவையாக பாயா செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சோம்பு - ¼ டீ ஸ்பூன்
- பட்டை - சின்ன துண்டு
- கல்பாசி - சிறிதளவு
- ஏலக்காய் -2
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மிளகுத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- புதினா - ஒரு கைப்பிடி
- கேரட் - 2
- பீன்ஸ் - 10
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை பட்டாணி - 1ஒரு கைப்பிடி
அரைக்க:
- சோம்பு - ½ ஸ்பூன்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பட்டை - சின்ன துண்டு
- கல்பாசி - சிறிதளவு
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1
- பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- நிலக்கடலை - 50 கிராம்
- கசகசா - 1
- பச்சை மிளகாய் - 2
- முந்திரி - 10
- தேங்காய் - ½ மூடி
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- காய்கறிகளை சுத்தமாக கழுவி உங்களுக்கு விருப்பமான அளவில் நறுக்கி
கொள்ளவும்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கல்பாசி
மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை
வதக்கவும்.
- அதனுடன் கசகசா, நிலக்கடலை, பொட்டுக்கடலை, மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்றாக சிவக்கும் படி வறுத்து கொள்ளவும்.
- அதில் முந்திரி, தேங்காய், மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக
வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- பின் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- பின் அதில் சோம்பு, பட்டை, கல்பாசி, ஏலக்காய், மற்றும் பிரியாணி இலை
சேர்த்து பொரிய விடவும்.
- பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை
வதக்கவும்.
- அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும்
மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் நன்றாக வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர்
மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்து எண்ணெய் பிரித்து வரும் போது மிளகுத்தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
- இட்லி, தோசை, மற்றும் இடியாப்பத்திற்கு சுவையான வெஜ் பாயா
தயார்!



Click it and Unblock the Notifications