Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. வெஜிடேபிள் பாயா
Vegetable Paya Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் வெஜிடேபிள் பாயா செய்யுங்கள்.
இந்த வெஜிடேபிள் பாயா இட்லியுடன் சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு வெஜிடேபிள் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெஜ் பாயா மசாலா...
* முந்திரி - 7-8
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 6 பல்
பிற பொருட்கள்...
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* கல்பாசி - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 1
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு
இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் முந்திரி, கசகசா, துருவிய தேங்காய், மல்லித்
தூள், சிக்கன் மசாலா, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 2 கப்
நீரை ஊற்றி, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து, குறைவான
தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
வெஜிடேபிள் பாயா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications