Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
5 பிரட் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இந்த வடையை செஞ்சு கொடுங்க.. சும்மா அள்ளும்...
Vegetable Bread Vada Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் அளவில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் துண்டுகள் உள்ளதா? அத்துடன் கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு மொறுமொறுப்பான வடையை செய்து கொடுங்கள்.
இந்த வடை வழக்கமாக சாப்பிடும் வடையின் சுவையில் இருந்து வேறுபட்டது. மேலும் இந்த வடையை 2-3 சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். காய்கறிகளும் சேர்த்துள்ளதால், சற்று சத்தானதும் கூட. எப்போதும் ஒரே மாதிரியான வடையை செய்து கொடுப்பதற்கு பதிலாக, இப்படியும் செய்து கொடுங்கள். இதனால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெஜிடேபிள் பிரட் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பிரட் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 5 துண்டுகள்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 3/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி
செய்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் கடலை மாவை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள்
எண்ணெய், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காயம்
சேர்த்து, அத்துடன் துருவிய கேரட்டையும் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கைகளால் நன்கு அழுத்தம்
கொடுத்து பிசைந்து விட வேண்டும். இப்படி பிசையும் போது, நீர் கூட
சேர்க்கத் தேவையில்லை. சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்துவிடும்.
* பின் பிசைந்த அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டமாக தட்டி ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, மிதமான
தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால்,
சுவையான வெஜிடேபிள் பிரட் வடை தயார்.



Click it and Unblock the Notifications