Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
வீட்டுல பிரட் இருந்தா.. ஈவ்னிங் மொறுமொறுன்னு இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. வீட்டுல விரும்பி சாப்பிடுவாங்க..
Vegetable Bread Cutlet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் கேட்பார்களா? அப்போது அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரி பஜ்ஜி, வடை என்று செய்யாமல், வீட்டில் பிரட் மற்றும் சில காய்கறிகள் இருந்தால் அவற்றைக் கொண்டு, ஒரு சுவையான கட்லெட் செய்யுங்கள்.
இந்த வெஜிடேபிள் பிரட் கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெஜிடேபிள் பிரட் கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பிரட் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 5 துண்டுகள்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (துருவியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த பிரட்டை எடுத்து, அத்துடன் ரவை,
கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சீரகத் தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் துருவிய இஞ்சி, கேரட் ஆகியவற்றை சேர்த்து நீர்
ஊற்றாமல் கைகளால் நன்கு பிசைந்து மூடி வைத்து, குறைந்தது 20 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, நன்கு கைகளால் இறுக்கமாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்ததை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தட்டையாக கட்லெட் போன்று
தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு அகலமான தவாவை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
வெஜிடேபிள் பிரட் கட்லெட் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications