Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி
நீங்கள் சைவ பிரியரா? உங்களுக்கு வித்தியாசமான சுவையிலான சைவ உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை சமைத்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
சரி, இப்போது வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 2
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
கல் சூடானதும், ஒரு சப்பத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications