For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறுத்து அரைச்ச சாம்பார்: ஓணம் ரெசிபி

By Maha
|

ஓணம் பண்டிகையன்று கேரளாவில் பல்வேறு ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதிலும் கேரளாவின் பாரம்பரிய ரெசிபிக்களானது சமைக்கப்படும். அப்படி ஓணம் பண்டிகையன்று சமைக்கப்படும் ஒரு ரெசிபி தான் வறுத்து அரைச்ச சாம்பார். இந்த சாம்பாரின் ஸ்பெஷலானது முதலில் மசாலாப் பொருட்களானது வறுத்து அரைக்கப்பட்டு, பின் சமைக்கப்படும்.

இங்கு கேரளா பாரம்பரிய ரெசிபியான வறுத்து அரைச்ச சாம்பார் ரெசிபியின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

Varutharacha Sambar: Onam Special Recipe

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 8
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, ஒரு பெரிய பௌல் அளவில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய், வெந்தயம், மல்லி, வரமிளகாய் மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அதில் துவரம் பருப்பை நீரில் கழுவி சேர்த்து, அத்துடன் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 6-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரை ஊற்றினால், வறுத்து அரைச்ச சாம்பார் ரெடி!!!

English summary

Varutharacha Sambar: Onam Special Recipe

Varutharacha sambar is a specialty of Kerala cuisine because its masala is first fried and then cooked. It is actually a very traditional sambar recipe that is a part of the Onam Sadhya feast.
Story first published: Sunday, September 7, 2014, 11:57 [IST]
Desktop Bottom Promotion