For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் தினத்திற்கு சுவையூட்டும் பழ சாலட்!

By Mayura Akilan
|

Valentines DayFruit Salad
காதலர்தினத்தில் சுவைக்கு முக்கிய இடம் உண்டு. சத்தான சுவையான சாலட் காதல் தினத்தில் ரெடி செய்யலாம். எங்கும் எடுத்துச் சென்று சாப்பிடலாம். காதலர் தினத்தன்று பேச மட்டுமே நேரம் இருக்கும். எங்க பசிக்கப் போகுது? என்று கேட்கிறீர்களா? பழங்கள் அடங்கிய சாலட்ஸ் சாப்பிட்டு ரொம்ப நேரம் தெம்பா பேசலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு எளிதாக செய்து கொடுக்கலாம்.

'காதல்' சாலட்ஸ் செய்முறை

1/2 - கப் ஸ்ட்ரா பெரீஸ்
1 - ஆப்பிள்
1 - கப் திராட்சை
1/2 - கப் அன்னாசிப் பழ துண்டுகள்
1 - கிவி
1 - ஆரஞ்ச்
- சாலட் க்ரீம் சிறிதளவு
1/2 - டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
சாலட் மசாலா பவுடர் சிறிதளவு
கறுப்பு சால்ட்
1 - டீஸ்பூன் ஸ்ட்ரா பெரீ சாஸ்
1 - டீஸ்பூன் சாக்லேட் சாஸ்
அழகு படுத்த சிறிதளவு பாதாம், செர்ரீ பழங்கள்

சாலட் செய்முறை

அகலமான பாத்திரத்தில் பழங்களை நறுக்கி கலக்கவும். அதனுடன் கிரீம், சாலட் மசாலா, கறுப்பு உப்பு போட்டு லேசாக கிளறவும்.

இந்த கலவையின் மேல் வெனிலா எசன்ஸ் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யவும். அதனுடன் ஸ்ட்ராபெரி மற்றும் சாக்லேட் சாஸ் ஊற்றவும்.

இந்த பழக்கலவையின் மீது பாதம், செர்ரீ பழங்களை இதய வடிவில் அழகு படுத்தலாம். காதலர் தினத்திற்கு ஏற்ற சுவையான சத்தான பழ சாலட் ரெடி.

English summary

Valentine’s Day : Salad Recipe | காதலர் தினத்திற்கு சுவையூட்டும் பழ சாலட்!

Valentine's day is a special day for couples. It is a day to express your feelings and win the heart of your valentine. Apart from gifting special gifts, you can prepare some recipes to make the valentine's day more romantic. Here is the valentine's day special salad recipe to impress your valentine.
Story first published: Tuesday, February 14, 2012, 11:56 [IST]
Desktop Bottom Promotion