காரசாரமான தக்காளி பூண்டு சட்னி செய்முறை -வீடியோ

Posted By: Batri Krishnan
Subscribe to Boldsky

பலவகை சட்னிகள் இந்திய சமையலறையில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையான உணவிற்கும் ஒவ்வொரு வகையான சட்னிகள் பறிமாறப்படுகின்றது.

உதாரணமாக சமோசாவுடன் மல்லி சட்னி அல்லது புதினா சட்னியை பறிமாறுங்கள். சுவையின் வித்தியாசத்தை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

அதிலும் தக்காளி பூண்டு சட்னியின் சுவை அலாதியானது. இதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் இங்கே அதன் செய்முறை குறிப்புகள் மற்றும் தேவையான பொருட்களை பட்டிலிட்டுள்ளோம். அதை முயற்சி செய்து பாருங்கள்.பறிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்

சமையல் நேரம் - 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

• தக்காளி - 1 கப் (நறுக்கியது)

• பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

• எண்ணெய் - 1 தேக்கரண்டி

• வெங்காயத்தாள் (வெள்ளை) - ¼th கப் (நறுக்கியது)

• காஷ்மீர் சிகப்பு மிளகாய் - 2 (நீரில் நனைத்தது மற்றும் நறுக்கியது)

• தக்காளி கெட்ச்அப் - 1 டீஸ்பூன்

• வெங்காயத்தாள் (பச்சை) - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

• கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

• உப்பு - தேவையான அளவு

செயல்முறை:

• ஒரு கடாயில் சிறிது அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும். இப்பொழுது அதில் வெங்காயத்தாளை (வெள்ளை) சேர்க்கவும். வெங்காயத்தாளை நன்கு வதக்கவும்.

• இப்போது, வெங்காயத்தாளுடன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பூண்டு மற்றும் வெங்காயத்தாள் கருகி விடக் கூடாது. அவ்வாறு கருகினால் சட்னி கசந்து விடும்.

tomato garlic chutney

• இப்போது, நனைத்த காஷ்மீர் சிகப்பு மிளகாய், மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

• சமையல் செய்யும் போது தக்காளியை அழுத்தி விட மறக்க வேண்டாம். அதன் பின்னர் அதனுடன் தக்காளி கெட்ச்அப் மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி கெட்ச்அப் சட்னிக்கு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொடுக்கும்.

tomato garlic chutney

• பொருட்கள் எல்லாம் நன்கு கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

• சட்னி முற்றிலும் குளிர்ந்த பின்னர் அதை வெங்காயத்தாள் மற்றும் கொத்தமல்லி வைத்து அலங்கரிக்கவும்.

tomato garlic chutney

இப்பொழுது உங்களின் தக்காளி பூண்டு சட்னி பறிமாறத் தயாராக உள்ளது.

English summary

tomato garlic chutney

Cooking method of tomato garlic chutney.