Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு
பயறு வகைகளில் மிகவும் சுவையானது தான் தட்டைப்பயறு. அதிலும் இந்த தட்டைப்பயறை கத்திரிக்காயுடன் சேர்த்து குழம்பு செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு வீட்டில் உள்ள பெரியோர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது.
உங்களுக்கு இந்த தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு - 100 கிராம்
கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரில் தட்டைப்பயறை போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடித்து பயறை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் கத்திரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள் ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறு சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயிறு கத்திரிக்காய் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
