For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முளைக்கட்டிய பாசிப்பருப்பு சாலட்

By Maha
|

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுக்க நினைத்தால், சாலட் செய்து கொடுங்கள். அதிலும் முளைக்கட்டிய பயிறுகளால் சாலட் செய்து கொடுத்தால், அவர்களின் உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆகவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, முளைக்கட்டிய பாசிப்பருப்பு கொண்டு எப்படி சாலட் செய்வது என்று உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து, குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Sprouted Moong Dal Salad

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பாசிப்பருப்பு - 1 1/2 கப்
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 1 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

சாலட் ட்ரெஸ்ஸிங்...

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் சாலட் ட்ரெஸ்ஸிங்கிற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின் சாஸ்பேனில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, முளைக்கட்டிய பாசிப்பருப்பை போட்டு, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

பருப்பானது நன்கு வெந்துவிட்டால், அடுப்பில் இருந்து இறக்கி, 3-4 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, பௌலில் வைத்துள்ள ட்ரெஸ்ஸிங் கலவையுடன் சேர்த்து கலந்து, அதன் மேல் தக்காளி, கொத்தமல்லி மற்றும் வெள்ளரிக்காய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான முளைக்கட்டிய பாசிப்பருப்பு சாலட் ரெடி!!!

English summary

Sprouted Moong Dal Salad

Sprouted Moong Dal Salad is quick and easy recipe to make and does not take much time to prepare either. So, here is the recipe of sprouted moong dal salad. Take a look and give it a try.
Story first published: Monday, January 6, 2014, 16:12 [IST]
Desktop Bottom Promotion