For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரசாரமான கடாய் வெஜிடபிள் கிரேவி

By Mayura Akilan
|

Kadai Vegetable
காய்கறிகள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. பலவித காய்கறிகளை ஒன்றாக போட்டு சமைப்பதன் மூலம் அனைத்து சத்துக்களும் ஒன்றாக கிடைக்கும். கடாய் வெஜிடபிள் கிரேவி சத்தான சைவ குருமா. இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றது.

தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு : கால் கிலோ

காளிஃப்ளவர் கால்கிலோ

கேரட் : 200 கிராம்

பச்சை பட்டாணி 100 கிராம்

பெரிய வெங்காயம் : 3

குடைமிளகாய் : 2

தக்காளி : 3

இஞ்சி , பூண்டு விழுது 2 டீ ஸ்பூன்

சீரகப்பொடி - 1 டீ ஸ்பூன்

மல்லிப்பொடி - 1 டீ ஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 2 டீ ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 டீ ஸ்பூன்

மிளகுப்பொடி - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

தேங்காய் அரைத்தது ஒரு கப்

உப்பு : தேவையான அளவு

கொத்தமல்லி தழை - அரை கட்டு

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கு, காளிஃப்ளவர் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட், இவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் நெய், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய உடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதன்பின் சீரகத்தூள், மஞ்சள் தூள், உள்ளிட்ட அனைத்து பொடிகளையும் கொடுத்துள்ள அளவுப் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்கு வதங்கிய பின், பின்னர் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தபின் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கடாயை மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்திருக்கும். அப்போது கொத்தமல்லி தழை சேர்த்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். சுவையான கடாய் வெஜிடபிள் தயார். இதனை சப்பாத்தி, பூரி, ஃப்ரைட் ரைஸ், போன்றவைகளுக்கு சைடிஷ்ஆக தொட்டுக்கொள்ளலாம்.

English summary

Spicy Side Dish: Kadai Vegetable | காரசாரமான கடாய் வெஜிடபிள் கிரேவி

The spicy curry is prepared both in the south indian and north indian style. Every restaurant has its own signature taste when it comes to kadai curry. Take a look to create your own signature taste by preparing the side dish at home.
Story first published: Saturday, March 10, 2012, 12:42 [IST]
Desktop Bottom Promotion