For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே சூப் தயாரிக்கும் போது நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டியது இது தான்!

வீட்டிலேயே சூப் வகைகள் தயாரிக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

By Staff
|

1. பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - அரை கிலோ

வெங்காயம் -1

எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி

உருளைக்கிழங்கு - 1

துருவிய எலுமிச்சம் பழத் தோல் - அரைக் கரண்டி

எலுமிச்சம் பழச் சாறு - 1 தேக்கரண்டி

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத் தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். 15 நிமிடங்கள் வரைஇவற்றை கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.


2. தேங்காய் பால் சூப்

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - அரை முடியில் எடுக்கப்பட்டது

பாதாம் பருப்புத் தூள் - ஒரு மேசைக் கரண்டி

சீரகம - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக் கரண்டி

பெய வெங்காயம் - 1

செய்முறை:

தேங்காய்ப் பால், கடுகு, வெங்காயம் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். காய்கறி வேகவைத்த சாறு மூன்று கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுகு மற்றும் அந்த வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால்கிளறிவிடவும். சில நிமிட கிளறலுக்குப் பின் சூடான தேங்காய்ப் பால் சூப் ரெடி!

Tips To Make Soup varieties in Home

3. வெள்ளரிக் காய் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

வெள்ளரிக்காய் (துருவியது) - 1

மைதா மாவு- 1 மேஜைக் கரண்டி

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி

பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி

வெண்ணெய் - 25 கிராம்

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்கவும். பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும்.பாலையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள்,பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


4. ஆப்பிள் சூப்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 4

சர்க்கரை - 4 தேக்கரண்டி

லவங்கப்பட்டை - 2 துண்டு

எலுமிச்சம் பழத் தோல் - அரைத் தேக்கரண்டி

கார்ன் மாவு- 2 தேக்கரண்டி

கிரீம் - அரைக் கோப்பை

தண்ணீர் - 500 மில்லி

தேன் - 1 மேசைக் கரண்டி

செய்முறை:

ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய ஆப்பிள்கள், எலுமிச்சம் பழத் தோல்,லவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும். மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் எலுமிச்சம் பழத் தோலையும், லவங்கப் பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கார்ன் மாவைஅரை கோப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவை சூப்போடு சேர்க்கவும்.

மிதமான சூட்டில் 5 நிமிடம் சுட வைக்கவும். பின்னர் அதை ஆற வைத்து, ஃபிட்ஜில் வைத்து ஜில்லென்று கிரீமுடன் பரிமாறவும்.


5. முள்ளங்கி சூப்

தேவையான பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி - 2

பார்லி அரிசி - 100 கிராம்

பச்சைப் பட்டாணி - சிறிதளவு

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

காரட் - 1

பால் - 100 மில்லி

காலிபிளவர் - சிறிதளவு

செய்முறை:

பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்கவும். பின்னர் முள்ளங்கி, காலிபிளவர், காரட்ஆகியவற்றை நறுக்கி வெந்த பார்லியுடன் சேர்த்து மீண்டும் வேக வைக்கவும்.பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத்தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சாப்பிடலாம்.

English summary

Tips To Make Soup varieties in Home

Tips To Make Soup varieties in Home
Desktop Bottom Promotion