Just In
- 1 hr ago
சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா?
- 14 hrs ago
இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா?
- 14 hrs ago
காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா? அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…
- 15 hrs ago
உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!
Don't Miss
- News
சூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்!
- Movies
அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்
- Finance
ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..!
- Automobiles
வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு!
- Sports
என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
- Education
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்
- Technology
பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாஹி மஸ்ரூம்
காளான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இத்தகைய காளானை நாம் காளான குழம்பு, காளான வறுவல் என்றெல்லாம் செய்திருப்போம். இவை அனைத்து சுவையுடன் இருக்கும். அதேப்போல் சாஹி மஸ்ரூம் என்னும் ரெசிபியும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த சாஹி மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:காளான் - 200 கிராம்
வெங்காயம் - 4 (நறுக்கியது)
தக்காளி - 5 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 1 கப்
முந்திரி - 1/2 கப் (அரைத்தது)
நெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்தது, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொண்டு, குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த பேஸ்ட் போட்டு, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், முந்திரி பேஸ்ட், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் நறுக்கி வைத்துள்ள காளானை அந்த கிரேவியில் போட்டு, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
காளான் வெந்ததும், அதில் ப்ரஷ் க்ரீமை சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சாஹி மஸ்ரூம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறலாம். அதிலும் இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.