சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

By: Batri Krishnan
Subscribe to Boldsky

டேஸ்டியான பனீர் பாரம்பரிய சமையலில் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. ஏனெனில் இது சுவை மிகுந்தது மட்டுமல்ல. ஆரோக்கியமானதும் கூட. பன்னீர் அல்லது பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தி நீங்கள் மிகவும் வித்தியாசமான மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை தயாரிக்க முடியும்.

paneer kulcha recipe

இங்கே நாம் மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்ச்சாவின் செயல்முறை குறிப்புகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். நீங்கள் இதுவரை பல்வேறு வகையிலான குல்ச்சாவை ருசித்திருப்பீர்கள். ஆயினும் இது பிற குல்ச்சா வகைகளை விட சுவை மிகுந்தது. அதிக கால்சியம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

பறிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 45 நிமிடங்கள்

சமையல் நேரம் - 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. சுத்திகரிக்கப்பட்ட மாவு - 3 கப்

2. சர்க்கரை - 1 தேக்கரண்டி

3. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

4. வெண்ணெய் - 5 டீஸ்பூன்

5. பால் - 1 கப்

6. உப்பு

ஸ்டப்பிங்கிற்கு:

7. பன்னீர் - 200 கிராம் (பிசைந்தது)

8. பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

9. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

10. கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

11. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

12. சாட் மசாலா - 2 தேக்கரண்டி

13. வெங்காயம் - 1 (நறுக்கியது)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்முறை:

செயல்முறை:

1. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அதன் பின்னர் இவை இரண்டையும் நன்கு கலக்கவும். இந்த மாவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

2. இப்போது ஒரு பால் ஜாடி எடுத்து அதில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் அந்த கலவையை நன்றாக கலக்கவும்.

செயல்முறை:

செயல்முறை:

3. இப்பொழுது, தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும்.

அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு மென்மையான மெல்லிய ஈரத் துணி கொண்டு மூடி வைக்கவும். சுமார் 40 நிமிடங்கள் பொருத்திருக்கவும்.

செயல்முறை:

செயல்முறை:

4. காத்திருக்கும் நேரத்தில் நாம் ஸ்டப்பிங்கிற்கு தேவையான பொருட்களை தயாரிக்கலாம்.

ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை சேர்க்கவும். .

5. அதன் பின்னர் அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

செயல்முறை:

செயல்முறை:

6. ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம்.

7. இப்போது நீங்கள் தயாராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருட்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

8. அதன் பின்னர் ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வடிவமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருட்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும்.

செயல்முறை:

செயல்முறை:

11.இப்பொழுது தோசைக் கல்லில் குல்ச்சாவை வைத்து சுட வேண்டும்.

12. அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவ வேண்டும். இப்பொழுது உங்களின் பன்னீர் குல்ச்சா பறிமாறத் தயாராக உள்ளது.

நீங்கள் குல்ச்சாவை நான்கு துண்டுகளாக வெட்டி, அதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிட்டு மகிழவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

paneer kulcha recipe

Method for preparation of paneer kulcha
Story first published: Friday, November 25, 2016, 13:00 [IST]
Subscribe Newsletter