For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராக்கி ஸ்பெஷல்: பன்னீர் அட்ரகி

By Maha
|

ரக்சா பந்தன் அன்று இனிப்புக்களை மட்டும் தான் சமைத்து அண்ணன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அப்போது சற்று வித்தியாசமாக, ஏதேனும் ஸ்பெஷலான சைடு டிஷ்களையும் செய்து கொடுத்து அசத்தலாம். அதற்கு பன்னீர் அட்ரகி சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலானோருக்கு பன்னீர் மிகவும் பிடித்தமான உணவுப் பொருள் என்பதால், இந்த பன்னீரைக் கொண்டு அருமையான முறையில் ஒரு ரெசிபி செய்து அசத்தலாம்.

இப்போது அந்த பன்னீர் ரெசிபியில் ஒன்றான பன்னீர் அட்ரகியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அட்ரகி என்பது இஞ்சியை அதிகம் போட்டு செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Paneer Adraki

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 2 (1 இன்ச் அளவு, தோலுரித்து நறுக்கியது)
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி - 3 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் கசகசா மற்றும் சீரகத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, பாதி இஞ்சியைப் போட்டு, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு கசகசா பேஸ்ட், மிளகு தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் விதக்க வேண்டும்.

பின்பு பன்னீர் துண்டுகளைப் போட்டு, நன்கு கிளறி விட்டு, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்து, பன்னீர் துண்டுகள் வெந்ததும், கரம் மசாலாவைத் தூவி கிளறி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான பன்னீர் அட்ரகி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, மீதமுள்ள இஞ்சியைப் போட்டு பரிமாற வேண்டும்.

English summary

Paneer Adraki

The much awaited Indian festival, Raksha bandhan is just round the corner. However apart from the sweet dishes, you will also need to have some special recipes for your brother in the main course. So, here is a delicious paneer recipe known as paneer adraki. So, prepare paneer adraki for your brother on this Raksha bandhan and gift him a mouthwatering treat.
Story first published: Tuesday, August 20, 2013, 12:58 [IST]
Desktop Bottom Promotion