For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு

By Mayura Akilan
|

Avarai kulambu
கிராமப் பகுதிகளில் பச்சை மொச்சை பிரசித்தமானது. இதன் சுவையே அலாதிதான். பச்சையாய் உள்ள காய் என்பதால் அதிக சத்தானதும் கூட. சமைத்துப் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை -- 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 3

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் விழுது : அரை கப்

குழம்பு தூள் – இரண்டு டீ ஸ்பூன்

கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்

எண்ணெய் : 3 டீ ஸ்பூன்

மொச்சை குழம்பு செய்முறை

பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி மொத்தமாக அரைக்கவும்.

பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும், தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் காய்ந்ததும் இறக்கவிடவும். சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.

English summary

Pachai Mochai/Avarai kulambu | கிராமத்து பச்சை மொச்சை குழம்பு

Avarai kaai or pachai mochai is a seasonal vegetable, people are really crazy about it and keep buying it very frequently during the season.
Story first published: Wednesday, April 18, 2012, 14:30 [IST]
Desktop Bottom Promotion