For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிளகு பூண்டு குழம்பு

By Mayura Akilan
|

Pepper Garlic Kolambu
பூண்டு உடல் நலத்திற்கு ஏற்ற உணவுப் பொருள். பூண்டின் மணத்திற்குக் காரணமான சல்ஃபர் அதில் உள்ள ஈதர் மனிதர்களின் நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். எனவே அடிக்கடி நாம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மிளகு பூண்டு குழம்பு சற்றே காரமான உடலுக்கு ஏற்ற சைவ குழம்பாகும்.

தேவையான பொருட்கள்:

மிளகு – 4 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மல்லி - 2 டீ ஸ்பூன்
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்முறை:

சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும். தேங்காய் வறுக்க மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
5 நிமிடம் வதங்கியபின் புளிக்கரைசல், தேவையான உப்பு போட்டு அரைத்தவற்றையும் போட்டு நன்கு கலக்க வேண்டும்.

1 கப் தண்ணீர் சேர்த்து மூடி மிதமாக அடுப்பை எரிய விடவேண்டும். கால் மணி நேரம் கழித்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது இறக்க வேண்டும். வத்த குழம்பு போல் பதத்தில் குழம்பு கெட்டியாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சுவை அதிகமாக இருக்கும்.

English summary

Melagu Poondu Kolambu (Pepper Garlic Kolambu) | மிளகு பூண்டு குழம்பு

Melagu Poondu Kolambu is a speciality in Chettinad cuisine Tamil Nadu . It is delightful spicy food. Garlic is a sulphurous compound and in general a stronger tasting clove has more sulphur content and hence more potential medicinal value.
Story first published: Friday, March 2, 2012, 13:14 [IST]
Desktop Bottom Promotion