For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முந்திரி காளான் மசாலா: ரக்ஷா பந்தன் ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன்' விழாவானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நாளன்று தங்கைகள் தங்கள் அண்ணன்களுக்கு ராக்கி என்னும் கயிற்றை கையில் கட்டி விடுவார்கள். அப்படி வெறும் கயிற்றினை மட்டும் கட்டிவிடாமல், அந்நாள் முழுவதும் தங்கள் அண்ணன்களுக்கு சமைத்துக் கொடுத்து அசத்துங்கள். அப்படி என்ன செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா?

இங்கு உங்கள் அண்ணன் விரும்பி சாப்பிடுமாறான முந்திரி காளான் மசாலா கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரெசிபியைப் படித்து பார்த்து, ரக்ஷா பந்தன் அன்று உங்கள் அண்ணனை அசத்துங்கள்.

Kaju Mushroom Masala For Raksha bandhan

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 4
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் காளானை சுடுநீரில் போட்டு அலசி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீரம், பட்டை, ஏலக்காய் சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, பின் அதில் தயிரை நன்கு அடித்து சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு காளானை சேர்த்து, மூடி வைத்து 6-8 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, பின் மூடியை திறந்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு, அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கினால், முந்திரி காளான் மசாலா ரெடி!!!

English summary

Kaju Mushroom Masala For Raksha bandhan

Kaju mushroom masala is a simple vegetarian recipe which can be prepared on Rakshabandhan. Take a look.
Story first published: Wednesday, August 6, 2014, 12:24 [IST]
Desktop Bottom Promotion