For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கதம்ப சாம்பார்

By Maha
|

Kadamba sambar
பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும், வடை பாயாசத்துடன் சாப்பாடு செய்து, அசத்துவார்கள். சில பண்டிகைக்கு ஸ்பெஷலான ரெசிபி என்று இருக்கும். அதேப் போன்று, இப்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். அதுவும் இதனை சிலர் காணும் பொங்கலன்று செய்து சாப்பிடுவார்கள்.

சிலர் இந்த காதம்ப சாம்பாரில் 7 காய்கறிகள் என்றெல்லாம் எண்ணிக்கை வைத்து செய்வார்கள். இப்போது அந்த கதம்ப சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ட்பபோமா!!!

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
மாங்காய் - 1 (சிறியது)
கேரட் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
அவரைக்காய் - 3 (நறுக்கியது)
பீன்ஸ் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 200 கிராம்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 4 டீஸ்பூன் (அரைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான கதம்ப சாம்பார் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.

English summary

Kadamba sambar | கதம்ப சாம்பார்

Kadamba sambar is one of the important festival sambar. Mainly prepared on Pongal Festival. Kadamba sambar means one in which you use many different vegetables and allow the flavors to all come together. We can call this as Kanu Kootu.
Desktop Bottom Promotion