For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கான தித்திக்கும் கோதுமை சப்பாத்தி

By Maha
|

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை ஆரோக்கியமாக மட்டுமின்றி, அவர்களுக்கு பிடித்தவாறும் சமைத்துக் கொடுக்க வேண்டும். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கு இனிப்பான உணவுப் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே அவ்வப்போது குழந்தைகளுக்கு இனிப்பான ரெசிபியை சமைத்துக் கொடுத்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

அந்த வகையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தையை சந்தோஷப்படுத்த இனிப்பாக இருக்கும் கோதுமை சப்பாத்தியை செய்து கொடுத்து அசத்துங்கள். இங்கு அந்த இனிப்பான கோதுமை சப்பாத்தியின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

Jaggery Chapathy Recipe For Kids

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
வெல்லம் - 1 கப் (தட்டியது)
பாதாம் - 20 (பொடி செய்தது)
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 3 (தட்டியது)
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு பௌலில் வெல்லம், பாதாம் பவுடர், நெய் மற்றும் ஏலக்காய் போட்டு, கெட்டியான பேஸ்ட் ஆகும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே 1 டேபிள் ஸ்பூன் வெல்ல கலவையை வைத்து மடித்து, மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும்.

இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், இனிப்பான கோதுமை சப்பாத்தி ரெடி!!!

English summary

Jaggery Chapathy Recipe For Kids

As a parent you need to ensure that your child is pampered with something he/she likes. jaggery is one such ingredient that most kids enjoy. Therefore, this jaggery chapathy recipe for kids is a must try.
Story first published: Friday, January 10, 2014, 15:56 [IST]
Desktop Bottom Promotion