குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

Posted By: Batri Krishnan
Subscribe to Boldsky

நூடில்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. இதை வெவ்வேறு வழிகளில் மற்றும் முறைகளில் தயாரிக்க முடியும்.

ஹாங்காக் நூடுல்ஸ் மிகவும் காரமாக இருந்தால், காண்டோனீஸ் நூடுல்ஸ் காரம் இல்லாமல் லேசாக இருக்கும். நீங்கள் எப்போதாவது எள் நூடுல்ஸ் முயற்சி செய்து பார்த்ததுண்டா

நாங்கள் உங்களுக்கு வழக்கமான நூடுல்ஸ் போன்று இல்லாமல் மிகவும் வித்தியாசமான ஒரு மாலை சிற்றுண்டி செய்முறை குறிப்புகளை வழங்க வேண்டும் என நினைத்து இந்த எள் நூடுல்ஸ் செய்முறையை கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதில் பயன்படுத்தும் பொருட்கள மிகவும் எளிதாக கிடைக்கும்.

எள் :

எள் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதிக கால்சியம் நிறைம்ந்தது சுவையும் அதிகம். கேழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி டேஸ்டியான நூடுல்ஸை நீங்களும் ட்ரை பண்ணுங்க.

how to prepare simple sesame noodles

செயல்முறை:

பறிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள்

சமையல் நேரம் - 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. வேகவைத்த நூடுல்ஸ் - 2½ கப்

2. பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

3. வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

4. இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

5. வினிகர் - 1 தேக்கரண்டி

6. கருப்பு சோயா சாஸ்- 1 தேக்கரண்டி

7. நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

8. வெங்காயத்தாள் - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

9. உப்பு - தேவைக்கு ஏற்றபடி

how to prepare simple sesame noodles

எப்படி செய்வது ?

1. எள்ளை மிதமான சூட்டில் குறைந்தது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்

2. இப்போது, அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

3. அதன் பின்னர் இதனுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும். அதனுடன் சிறிது உப்பு, கருப்பு சோயா சாஸ் மற்றும் சிறிது வினிகர் சேர்க்கவும்.

4. கலவையை நன்கு கலக்க அவற்றை சிறிது பிரட்டி விடவும். பின்னர் நூடுல்ஸ் மீது வறுத்த எள் தூவவும்.

5. இப்போது, எள், நூடுல்ஸில் நன்கு கலக்கும் வண்ணம் கலவையை மீண்டும் பிரட்டி விடவும். கலவை நன்கு கலந்த பின் அடுப்பை அனைத்து விடவும்.

6. நூடுல்ஸை ஒரு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.

7. நறுக்கப்பட்ட வெங்காயத் தாள் மற்றும் மீதமுள்ள எள்ளை, நூடுல்ஸ் மீது தூவி அலங்கரிக்கவும்.

8.இப்பொழுது உங்களின் சுவை மிகுந்த எள் நூடுல்ஸ் பறிமாறத் தயாராக உள்ளது.

உங்களுக்கு இன்னும் எளிதாக புரிய இங்கே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் !!

உங்கள் குழந்தைகள் காரம் இல்லாத உணவை உட்கொள்ள விரும்பினால் இது அவர்களுக்கேற்ற மிகவும் சரியான உணவு. சுவை மிகுந்த இது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதை நீங்கள் மேழும் சிறப்பிக்க விரும்பினால் இதனுடன் வேக வைத்த காய்கறிகள், முட்டை, மற்றும் சிக்கன் ஆகியவற்றை சேர்க்கலாம்.

English summary

how to prepare simple sesame noodles

Recipe for tasty sesame Noodles for children.healthy and less time consumption.
Story first published: Wednesday, November 23, 2016, 12:45 [IST]