For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபுரூட் சாலட்

By Maha
|

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போர் காலையில் ஃபுரூட் சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் கோடையில் உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிப்பதுடன், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.

இங்கு ஒருசில சீசன் பழங்களை சேர்த்து ஃபுரூட் சாலட் செய்யப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சாப்பிட்டு, தினத்தை ஆரோக்கியமாக ஆரம்பியுங்கள்.

Fruit Salad For Breakfast

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1 (நறுக்கியது)
தர்பூசணி - 1 கப் (நறுக்கியது)
அன்னாசிப்பழம் - 1 கப் (நறுக்கியது)
மாம்பழம் - 1 (நறுக்கியது)
பப்பாளி - 1/2 (நறுக்கியது)
ஸ்ட்ராபெர்ரி - 6 (நறுக்கியது)
ப்ளாக் சால்ட் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் நறுக்கிய வைத்துள்ள அனைத்து பழங்களையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதன் மேல் ப்ளாக் சால்ட் தூவி, பின்பு தேனை ஊற்றி பரிமாறினால், ஃபுரூட் சாலட் ரெடி!!!

English summary

Chilled Summer Fruit Salad For Breakfast

Summer fruit salad is made with cooling fruits for summer. You can try this summer fruit salad recipe to have a chilled breakfast.
Story first published: Tuesday, April 22, 2014, 18:48 [IST]
Desktop Bottom Promotion