Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு
கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அந்த குழம்புடன் தேங்காயை அரைத்து சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா?
இங்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நீளமான கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்
குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் மசாலா பொடிளை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
