Just In
- 39 min ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- 2 hrs ago இந்த உணவுகளில் முட்டையை விட துத்தநாகமும் மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளதாம்... தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago 1 கப் இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 3 hrs ago அடர்த்தியான, அழகான கூந்தலுக்கு வீட்டில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்யுங்கள்..!
Don't Miss
- Movies Actor Vikram: தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நடிகர் விக்ரம் கேள்வி!
- Finance ஒரு மாச ஷாப்பிங்கிற்கு ரூ.1.86 கோடியாம்.. பெண்களை பொறாமையில் பொங்க வைக்கும் துபாய் பெண்..!!
- News எடப்பாடி பழனிசாமி நம்பர் ஒன் தான்.. எதில் தெரியுமா? விட்டு விளாசிய முதல்வர் ஸ்டாலின்
- Sports IPL 2024 : நைசாக முத்தம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரண்டு போன சாம்சன்.. டாஸ் நிகழ்வில் என்ன நடந்தது?
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
வெஜ் சால்னா
உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இருக்கிறதா? அப்படியெனில் அந்த காய்கறிகளைக் கொண்டு சுவையான சால்னா செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யவுள்ளீர்களா? அதற்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இருக்கிறதா? அப்படியெனில் அந்த காய்கறிகளைக் கொண்டு சுவையான சால்னா செய்யுங்கள். இந்த சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரியுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த வெஜ் சால்னாவை செய்து கொடுங்கள், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு வெஜ் சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன தக்காளி - 2 (நறுக்கியது)
* புதினா இலைகள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மீல் மேக்கர் - 1/2 கையளவு
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* முந்திரி - 5-6
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 1
செய்முறை:
* முதலில் காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயைத் தவிர மற்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சிறிது நீரை கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் மீல் மேக்கரை சேர்த்து சிறிது உப்பு தூவி மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து, மீல் மேக்கரை சுத்தமான நீரில் ஒருமுறை அலசி, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்ற சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான வெஜ் சால்னா தயார்.
Image Courtesy: asmallbite