Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
Veg Paya Recipe In Tamil: இட்லி, தோசை, சப்பாத்திக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து சுவைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வெஜ் பாயா செய்யுங்கள். இந்த வெஜ் பாயா இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பரோட்டா என்று அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வெஜ் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7
* நறுக்கிய தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கசகசா, சோம்பு, முந்திரி, நறுக்கிய
தேங்காய் சேர்த்து ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை,
கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறிய பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து
5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான வெஜ் பாயா தயார்.



Click it and Unblock the Notifications
