Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மீன் வறுவல் சுவையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி தெரியுமா?
இன்று மதியம் சாம்பாருக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு மீன் வறுவல் சுவையில் ஒரு அட்டகாசமான வாழைக்காய் வறுவலை செய்யுங்கள்.
இன்று தைப்பூசம் என்பதால், பலரது வீடுகளில் சைவ உணவுகளை தான் சமைப்போம். பெரும்பாலும் ஒரு நல்ல நாளில் சாம்பார் வைத்து, பொரியல், வறுவல் செய்து, வடை, பாயாசத்துடன் சாப்பிடுவோம். இன்று மதியம் சாம்பாருக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு மீன் வறுவல் சுவையில் ஒரு அட்டகாசமான வாழைக்காய் வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் செய்வது மிகவும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு மீன் வறுவல் சுவையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2 (தோலுரித்து, மெல்லிய மற்றும் பட்டைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* சாம்பார் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் வாழைக்காயை நீரில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, வாழைக்காயை வேக வைக்க வேண்டும்.
* வாழைக்காய் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டிவிட்டு, வாழைக்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாக்கள் அனைத்தையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து பிரட்ட வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications