Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வாழைக்காயை ஒருவாட்டி இப்படி வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் போல செமயா இருக்கும்...
Vazhakkai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? எப்போது வாழைக்காயை வாங்கினாலும், அதை பொடியாக நறுக்கி பொரியல் போன்றோ அல்லது பஜ்ஜியாகவோ தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைக்காயை வாங்கினால், அதைக் கொண்டு வறுவல் செய்யுங்கள். அதுவும் மீன் வறுவலே தோற்றுப்போகும் அளவில் ருசியான சுவையில் வறுவல் செய்யுங்கள்.
இந்த வாழைக்காய் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்துடன் பொருத்தமாக இருக்கும். முக்கிய இப்படி வறுவல் செய்தால், வாழைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த வறுவலை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - சிறிது
* தண்ணீர் - சிறிது
ஊற வைப்பதற்கு..
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, பின் வட்டத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட வாழைக்காயை போட்டு, 2 நிமிடம் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா,
சீரகத் தூள், சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள வாழைக்காயை அதில் போட்டு நன்கு பிரட்டி, 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,
ஊற வைத்துள்ள வாழைக்காயை ஒவ்வொன்றாக போட்டு, மேலே சிறிது எண்ணெய்
ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைக்காய்
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications