Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வாழைக்காய் வாங்குனா இந்த செட்டிநாடு ஸ்டைல் புளிக்குழம்பு செய்யுங்க... 1 வாரம் வைச்சு சாப்பிடலாம்...!
Vazhakkai Pulikulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பது பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். சாம்பார் வைத்து சலித்துப் போனால் அனைவரும் வைப்பது புளிக்குழம்பைத்தான். வாழைக்காய் பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத ஒரு காய்கறியாகும், ஏனெனில் வாழைக்காயை வைத்து பெரும்பாலும் பொரியல் அல்லது பஜ்ஜி போன்றவற்றைத்தான் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் வாழைக்காயை வைத்து அட்டகாசமான சுவையில் புளிக்குழம்பு செய்யலாம். வாழைக்காய் புளிக்குழம்பு சுவையானதாக இருப்பதுடன் அதில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. மதிய வேளையில் எளிமையான மற்றும் சுவையான குழம்பு செய்ய விரும்புபவர்கள் இந்த வாழைக்காய் புளிக்குழம்பை தாராளமாக செய்யலாம்.

இந்த வாழைக்காய் புளிக்குழம்பு செட்டிநாடு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் மிகவும் பிரபலானதாகும். உங்களுக்கு இந்த சுவையான வாழைக்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள். இதை முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- வாழைக்காய் 2
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 2
- மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- பூண்டு - 2 பல்
செய்முறை:
- முதலில் புளியை ஒரு கப் த்ண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- வாழைக்காயில் அடியையும், நுனியையும் லேசாக நறுக்கி விட்டு நீளத்தில் நான்காக பிளந்து அரை அங்குல கனமான துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கி, கண்ணாடி பதத்திற்கு வரும்வரை காத்திருக்கவும்.
- பின்னர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி விழுதாக அரைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் தாளித்து பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- மசாலாக்களின் பச்சை வாசனை போனதும் உப்பு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும், பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்த வாழைக்காய் துண்டுகளைப் போட்டு மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியாக பூண்டை தட்டிப் போடவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கினால் சூப்பரான வாழைக்காய் புளிக்குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications