Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2 வாழைக்காய் இருந்தா.. இந்த மாதிரி பொடிமாஸ் பண்ணுங்க.. கொஞ்சம் கூட மிஞ்சாது..
Vazhakkai Milagu Podimas Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காயை எப்போது வாங்கினாலும், ஒரே மாதிரி வறுவல், பொரியல் தான் செய்வீர்களா? அவற்றைக் கொண்டு வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் வாழைக்காய் மிளகு பொடிமாஸை செய்து சாப்பிடுங்கள்.
இந்த பொடிமாஸ் சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இப்படி ஒருமுறை பொடிமாஸ் செய்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், பின் எப்போது வாழைக்காய் வாங்கினாலும், இப்படி தான் செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு வாழைக்காய் மிளகு பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் மிளகு பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வாழைக்காய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு..
* மிளகு - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் முனைகளை நீக்கிவிட்டு, இரண்டு
துண்டுகளாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, வாழைக்காய் மூழ்கும் அளவில்
நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* வாழைக்காய் முக்கால்வாசி வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து
நன்கு குளிர வைக்க வேண்டும்.
* வாழைக்காய் நன்கு குளிர்ந்த பின், அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, துவரம் பருப்பு
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, சீரகம், சோம்பு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை
மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி, 3-4
நிமிடம் வேக விட வேண்டும்.
* வாழைக்காய் நன்கு வெந்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வாழைக்காய்
மிளகு பொடிமாஸ் தயார்.



Click it and Unblock the Notifications