Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
2 வாழைக்காய் இருந்தா இந்த பொரிச்ச கார குழம்ப செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட அமிர்தமா இருக்கும்...!
Vazhakkai Kara Kulambu Recipe in Tamil: தினமும் சாம்பார் வைத்து போரடித்து விட்டதா? மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அற்புதமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காயைக் கொண்டு தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான கார குழம்பை செய்யுங்கள்.
இந்த வாழைக்காய் கார குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு வாழைக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 2
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 2 (
- மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
- துருவிய தேங்காய் -1/4 கப்
- கசகசா - 1 டீஸ்பூன்
- முந்திரி - 3
- பட்டை - 1
- கிராம்பு - 1
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
- கறிவேப்பபிலை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் வாழைக்காயின் தோலை சீவி விட்டு, அதனை வட்டமாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவத்திலேயோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா மற்றும் முந்திரி போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு போட்டு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
- குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து, 6-8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பொரிச்ச வாழைக்காய் குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications











