Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாழைத்தண்டை பொரியல் பண்ணாம இந்த மாதிரி கர்நாடகா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Vazhaithandu Chutney Recipe in Tamil: வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மக்களுக்கு பயனுள்ளவைதான். குறிப்பாக அதன் தண்டு பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்யும். ஆனால் வாழைத்தண்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே அதை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம் அதன் சுவைதான்.
பொதுவாக வாழைத்தண்டை வைத்து பொரியல்தான் செய்வார்கள், அதன் சுவை பிடிக்காததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை சாப்பிட மாட்டார்கள். எனவே வாழைத்தண்டை வைத்து சுவையான உணவுகளை சமைக்க முயற்சிக்க வேண்டும். வாழைத்தண்டை வைத்து சுவையான ரெசிபி என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது வாழைத்தண்டு சட்னிதான்.

வாழைத்தண்டை வைத்து சட்னி செய்ய முடியுமா என்று நீங்கள் அதிர்ச்சியாகலாம். ஆனால் உண்மையில் வாழைத்தண்டை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சட்னியை அரைக்கலாம். ஒருமுறை இந்த சட்னியை அரைத்து பார்த்தால் அதன்பின் வாழைத்தண்டு வாங்கினாலோ இந்த சட்னியைத்தான் அரைப்பீர்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும் இந்த வாழைத்தண்டு சட்னி கர்நாடகாவின் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமானதாகும். .
உங்களுக்கு கர்நாடகா ஸ்பெஷல் வாழைத்தண்டு சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய வாழைத்தண்டு
- 3 வர மிளகாய்
- அரை ஸ்பூன் வர மல்லி
- அரை கப் துருவிய தேங்காய்
- சிறிதளவு புளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- வாழைத்தண்டின் வெளிப் புறத் தோல்கள் அனைத்தையும் நீக்கவும்.
- வாழைத்தண்டை நன்றாக அலசி, நறுக்கவும். வாழைத்தண்டின் நாரை கவனமாக அகற்றவும்.
- நறுக்கிய வாழைத்தண்டை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு, அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
- பின்னர் வர மிளகாயை உடைத்து சேர்க்கவும், அதன்பின் மல்லி விதைகளை சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக புளியை சேர்க்ககிவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
- அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.
- அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் உடைத்த வர மிளகாயை சேர்க்கவும்.
- மிளகாய் நிறம் மாறியதும் அதை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் சுவையான வாழைத்தண்டு சட்னி ரெடி.
- இது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications