Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாழைப்பூவை ஒருவாட்டி இப்படி துவையல் செஞ்சு சுடு சாதத்தோட சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Vazhaipoo Thuvaiyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? பொதுவாக வாழைப்பூவை வாங்கினால், அதைக் கொண்டு பொரியல் அல்லது வடை என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒருமுறை துவையல் செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். மேலும் இப்படி வாழைப்பூவை செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு வாழைப்பூ துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* வாழைப்பூ - 1
* தயிர் - 2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - ஊற வைக்க தேவையான அளவு
வதக்குவதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள
வேண்டும். பின் அதை தயிர் மற்றும் உப்பு கலந்த நீரில் போட்டு, சிறிது
நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பெருங்காயத் தூள், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு
சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை, வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி,
பின் கொத்தமல்லி மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற வைத்துள்ள வாழைப்பூவை
சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் மற்றும் வாழைப்பூ என
அனைத்தையும் சேர்த்து, சிறிது உப்பு தூவி, நீரை சிறிது ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள துவையலை சேர்த்து 2 நிமிடம்
வதக்கி இறக்கினால், சுவையான வாழைப்பூ துவையல் தயார்.



Click it and Unblock the Notifications