Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2 வாழைப்பழமும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.
Vazhai Ilai Kolukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர், குறிப்பாக குழந்தைகள் சாப்பிட ஏதாவது இனிப்பாக கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தான ஒரு ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பழமும், கோதுமை மாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் வாழைப்பழ கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷலே வாழைஇலையில் வைத்து மடித்து வேக வைப்பது தான். இப்படி கொழுக்கட்டை செய்யும் போது, வாழைப்பழம் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த வாழைப்பழ கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* தேங்காய் - சிறிது (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* நன்கு கனிந்த வாழைப்பழம் - 2-4 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* வாழை இலை - சிறிது (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நாட்டுச்சர்க்கரையை எடுத்து,
அத்துடன் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நாட்டுச்சர்க்கரை நன்கு
கரைந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
துண்டுகளாக்கப்பட்ட தேங்காய் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக ப்ரை
செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் துண்டுகளாக்கப்பட்ட வாழைப்பழத்தை சேர்த்து 1
நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி, கரைத்து வைத்துள்ள
நாட்டுச்சர்க்கரை நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் 1 கப் கோதுமை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு
கிளறி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* கொழுக்கட்டை மாவானது ஓரளவு குளிர்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
ஒரு வாழை இலையில் வைத்து, மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று
அனைத்து மாவையும் வாழை இலைகளில் வைத்து மடித்து, இட்லி தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, நீர் கொதித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து மூடி,
மிதமான தீயில் வைத்து, 7-8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
வாழைப்பழ இலை கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications